ஒரே நாளில் உலகின் அழகிய சிறுமியாக உருவான நைஜீரியாவைச் சேர்ந்த ஜாரே.
நைஜிரியாவை சேர்ந்த 5 வயதான சிறுமி ஒரே நாளில் உலக அழகியாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறாள் . இவளது தோற்றம் மிகவும் வசீகரமானது. இவளுடைய கண்களோ கவிதை பாடும் கண்கள் , காண்போரை கவர்ந்திழுக்கும் கூந்தல் ,மிகவும் மென்மையான சருமம் என அனைத்து அழகிய அம்சத்துக்கும் இந்த சிறுமி ஒரு வரம்.
மொபே பாமுயிவா என்ற புகைப்பட கலைஞர் இந்த சிறுமியின் அழகை பார்த்து ஆச்சாரியபட்டு பல புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து இவள் " என்ன ஒரு அழகு !... மனிதபிறவி யில் உலவும் ஒரு தேவதை என பரவசபட்டுள்ளார். பிறகு இவள் ஒரு தேவதை என பெயர் சூட்டி, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார் .
தற்போது இந்த புகைப்பட கலைஞர் இந்த சிறுமியை புன்னகைத்தோ அல்லது சத்தமிட்டு சிரித்தோ புகைப்படம் எடுத்திருக்கலாம் , ஆனால் இவரோ நம் கண்கள் வழியாக இவளின் இயல்பான தோற்றத்தினை காணவைத்திருக்கிறேன் என அந்த புகைப்படகலைஞர் கூறியுள்ளார் .
இந்த அழகிய சிறுமி ஜாரேயின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்தவர்கள் பரவசம் அடைந்து இந்த சிறுமி உலகின் அழகிய சிறுமி என கூறியுள்ளனர்.
ஜாரே என்ற இந்த சிறுமிக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர்.அவர்கள் ஜோமி மற்றும் ஜோபா , ஜோமிக்கு 7 வயது ஜோபாக்கு 10 வயது என குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment