மனைவியின் பாசத்தால், அவருக்கு சிலை வடித்த அன்பு கணவர்


செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி இவர் அப்பகுதில் கேபிள் ஆபரேட்டர் வேலையை செய்து வருகின்றார். இவருடைய மனைவி பெரியபிராட்டி அம்மாள். இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவர் இறந்துவிட்டார். இவரின் நினைவாக அவரையே சிற்பமாக செதுக்கி, தினமும் அவரோடு இரண்டு மணி நேரம் பேசிவருகின்றார்.

ஆசைத்தம்பி, இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இருக்கும் மேட்டுப்பட்டி கிராமம். இவரின் மாமன் மகள் தான் பெரியபிராட்டி அம்மாள். கணவன், மனைவி இருவருக்கும் 1977-ம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது. இருவரும் மிகவும் அன்பும், பாசத்தோடு இருந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. குடும்ப சூழ்நிலை காரணமாக சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளார். மனைவியின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஒரு மளிகை கடை முதலில் நடத்தி உள்ளார். போதிய வருமானம் வரவே , மீண்டும் மனைவியின் அறிவுறுத்தலின் படி கேபிள் டிவி தொடங்கி உள்ளார். அதன் பின் கை நிறைய வருமானம் அவருக்கு வந்தது. பின்பு மனைவியின் விருப்பப்படி நல்ல இடம் வாங்கி வீடும் கட்டி சந்தோசமாக வாழ்ந்துள்ளார். ஆசைத்தம்பியின் அனைத்து முயற்சியிலும் அவர் மனைவியின் பங்கு ஈடுஇணையற்றது. அவரும் தன் மனைவியின் செல்லையே வேதவாக்காக கேட்டு செயல்ப்பட்டுள்ளார். திடீர் என அவரின் மனவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிற்று, உடனே மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. குடுப்பத்தில் உள்ள அனைவரும் நிலைகுலைந்துவிட்டனர்.

அதன் பின் பெரியபிராட்டி அம்மாள் , நான் எப்போதுமே உங்களுடன் தான் இருப்பேன் என்று அனைவருக்கும் தைரியம் கொடுத்தார். அப்போது அவர் கணவர் அவரிடம் உனக்காக சிலை வைப்பேன் என்று கேட்டுள்ளார். அதற்கும் அவர் சம்மதம் தெரிவித்துள்ளார் அதன் பின் அவர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இறந்துவிட்டார்.

அதன் பின் மனைவி இறந்த 16 ம் நாள் அன்று மாமல்லபுரம் அருகே உள்ள சிற்ப கூடத்தில் மனைவியின் உருவ சிலை செதுக்க முடிவெடுத்து, 5 அடி மற்றும்  ஓர் அங்குல உயரத்தில் சிலையை உருவாக்கினார். பின்பு இதனை குடுப்பதினார் அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாக அனைவருக்கும் அழைப்பும் விடுத்தார். அதன் படி மனைவி இறந்த 10வது மாதத்தில் அவருக்கு சிலை திறந்து குடுப்பதினார் அனைவரையும் ஆச்சர்ய படுத்தியுள்ளார்.தற்போது கணவர் ஆசைத்தம்பி தினமும் மனைவியுடன் இரண்டு மணி நேரம் பேசி , மகிழ்ச்சியாக உள்ளார். இது பற்றி உங்கள் கருத்துக்களை கீழே பதிவுடுங்கள்.

Comments

Popular posts from this blog

Jayalalitha talks o panneerselvam in Meeting - Viral Video

Health Benefits of Palm Sugar - Tamil info

how corrupt HPCL Petrol Bunk operators

Viral news about First Human Head Transplant

தமிழ் மொழி இசையின் சிறப்பை போற்றும் விதமாக , தமிழ் பாடலை வெளியிட்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்..!