கர்ப்பிணி பெண்க்கு படிகட்டாக மாறி உதவிய காவலர்கள் - இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்


நேற்று தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு வந்த  மின்சார ரயில் ஓன்று தண்டவாளத்து சிக்னல் பிரச்னை காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே நிப்பாட்டப்பட்டது. சுமார் இரண்டு மணிக்கும் நேரமாக ரயில் எடுக்கப்படவில்லை. இதனால் பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி சென்று விட்டனர். 

ரயிலில் அமுதா என்ற கர்ப்பிணிப் பெண்ணும் இருந்துள்ளார். தண்டவாளத்திற்கும்  படிற்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருந்ததால் அவரால் கீழிறங்க முடியவில்லை. அதிக நேரமாக அமுதா ரயிலிலிருந்து இறங்க முடியாமல் தவித்தார். அந்த நேரம் அங்கே வந்த போலீஸ்காரர்கள் தனசேகரன் , மணிகண்டன் ஆகியோர் அந்த கர்ப்பிணி பெண்ணின் நிலையைப் புரிந்து கொண்டனர். பின் அவர்கள் படிகள் போல நின்று. அந்த பெண்ணை இறங்க உதவினர்.

அந்த பெண் அவர்களின் முதுகில் ஏறி மெதுவாக ரயிலிலிருந்து கீழே இறங்கினார். அதேபோல், மேலும் ரயிலில் இறங்க முடியாமல் தவித்த பல முதியவர்கள் இறங்கவும் இரு போலீசாரும்  உதவினர். தக்க சமயத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு கர்ப்பிணி பெண்க்கும்  மற்றும் முதியவர்களுக்கு உதவிய போலீஸ்காரர்களை அங்கு உள்ள பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியதோடு நன்றியும் தெரிவித்தனர். இந்த போலீசாருக்கு இணையத்திலும் வாழ்த்துக்கள் குவித்த வண்ணம் வந்துள்ளது. நீங்களும் உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

Comments

Post a Comment

Popular posts from this blog

Chitthappa special BEEPSHOW - Smile settai

Rajni fan viral video on social media's

Gulf of Alaska, where two oceans meet but never mix

Vijayakanth about vinu chakaravarthy - Viral news