டொனால்ட் ட்ரம்ப்யை கடவுளாக பூஜிக்கும் ஒரு இந்திய குடும்பம்
உலகத்தில பல இடங்களில் பலவிதமான கடவுளுக்கு பூஜைகள் நடத்துவார்கள் , ஆனால் இங்கு இந்தியர் ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு தினமும் பூஜை செய்து அவரை வழிபட்டு வருகின்றார்.
தெலுங்கானா மாநிலத்தில் கோனே என்னும் கிராமத்தில் விவசாயியாக வேலைபார்ப்பவர் க்ரிஷ் ராஜு . இவருக்கு வயது 31. இவர் தற்போது இந்தியாவின் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றார். இவர் கடந்த மூன்று வருடங்களாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்ன் புகைப்படத்தை வைத்து கொண்டு தினமும் நாள் தவறாமல் அவரை பூஜித்து வருகின்றார்.
தொடக்கத்தில் அவரை அவர் குடும்பத்தினர் அவரை திட்டி, தடுத்துள்ளனர். ஆனால் டிரம்ப்ன் மீது கொண்ட பக்தியினால் குடும்பத்தினரையும் மீறி தினமும் அவருடைய புகைப்படத்திற்கு பூஜை செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரது குடும்பத்தாரையும் சமாதானபடுத்தி அவர்களையும் பூஜையில் கலந்துகொள்ள வைத்துள்ளார்.தற்போது குடுப்பதினார் அனைவரும் தவறாமல் அந்த பூஜையில் கலந்து கொண்டு டிரம்பை கடவுளாக ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும் தன் விரலை பிளேடால் வெட்டி கொண்டு ரத்தத்தாலும் பூஜை செய்துள்ளார்.
க்ரிஷ் ராஜுவை, அவரது கிராமத்தினர் மனநல மருத்துவரை பார்க்க அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அவர் எனக்கு யாரையும் பார்க்கவேண்டாம், என் இதயமும், கடவுளும் டிரம்ப்,அவரை மட்டும் பார்த்தால் போதும், தொடர்ந்து அவரை பூஜிப்பேன் என கூறியுள்ளார்.
Comments
Post a Comment