கல்லூரி சீருடையோடு மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றும் கேரள பெண்..


கேரளா மாநிலம் அலப்புழாவை சேர்த்தவர் ஹனன் இவருடைய வயது 21. இவர் கேரளமாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில்  பி.எஸ்.சி (கெமிஸ்ட்ரி) இறுதியாண்டு படித்து வருகிறார். இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக மாலை நேரத்தில் மீன் விற்பனை செய்து தன் குடும்பத்தை காப்பாற்றிவந்துள்ளார். இவருடைய செயலை பார்த்து பாராட்டும் விதமாக கேரளாவின் பிரபல நாளிதழ் ஒன்றில் இவரது கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்டுரையை படித்தவர்களுக்கு இவர் மீது இரக்கம் ஏற்பட்டது, பிறகு இவருக்கு பலரும் உதவ முன் வந்தனர்.ஹனனின் இந்த கட்டுரையை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். 

அதில் இந்த மாணவின் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை பார்த்து பலர் பாராட்டி கருத்து தெரிவித்தனர்.ஆனால் சிலர் இவரை கேவலமாக கிண்டல் செய்து, பின் இது பொய் பணம் பறிப்பதிற்க்காக இவள் போடும் திட்டம் எனவும் சிலர் கருத்து தெரிவித்து பல  வதந்திகளை பரப்பியுள்ளனர்.இந்த நேரத்தில் ஹனன் மிகவும் வருத்தத்திற்கு உள்ளானார்.மேலும் இவருக்கு ஆறுதல் கூறும் விதமாக இவர் படிக்கும் கல்லூரியின் முதல்வரும், அவரது கல்லூரி நண்பர்களும் இவரது கதை உண்மை தான் என்று கூறியுள்ளனர். மேலும் இவருக்கு ஆறுதல் கூறும் விதமாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் இவரை பற்றி ஆதரவும் தெரிவித்தார். பின் இவரை கேலி செய்தவரை வன்மையாக கண்டிக்கவும் செய்தார். ஆனால் ஹனன் மனமுடைந்து இனி எனக்கு யாரும் உதவ வேண்டாம் என்னால் முடிந்த வேலையை செய்து என்னையும் என் குடும்பத்தையும் நான் கவனித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ஹனனின் மன குமுறலை அறிந்த கேரளா முதல்வர்,உடனே ஹனனை கிண்டல் செய்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார்.மேலும் அவர் கூறுவதாவது ஹனனின் கதையை கேட்டு தான் பெருமைகொள்வதாகவும், எப்போதும் எனது ஆதரவு இருப்பதாகவும் , ஹனனின் தனக்காக மட்டும் உழைக்கவில்லை அவளுடைய குடும்பத்திக்காகவும் உழைக்கிறாள் . மேலும் அவர் கூறுகையில் இவளின் உழைப்பை பார்த்து நாம் பெருமையடையவேண்டும், ஹனன்கு எப்போதும் எல்லா ஆதரவும் உண்டு. மேலும் அவருக்கு எல்லா உதவியும் கிடைக்க உத்தரவிட்டுளேன், ஹனனை கிண்டல் செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ்க்கு உத்தரயிட்டுள்ளேன் என கேரளா முதல்வர் கூறியிருந்தார். 

இதையும் மீறி வயநாடு பகுதியை சேர்ந்த நூருதீன் ஷேக் என்பவர் தனது முக நூல் பக்கத்தில்  தவறாக கூறியுள்ளார், இவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.



தற்போது இந்த பெண்ணின் நிலைமை அறிந்த கேரள தன் ஆர்வ அமைப்பு ஒன்று சுலபமாக கல்லூரிக்கு செல்ல, வீடு கட்டுவதற்கு அவர் செல்லும் கல்லூரிக்கு அருகில் 5 சென்ட் இடம் வழங்கி உள்ளனர்.


Comments

Popular posts from this blog

Health Benefits of Palm Sugar - Tamil info

Tips To Treat Darkness Around The Mouth, Nose and Chin

A decent beg of the traffic police-a viral video

Jayalalitha talks o panneerselvam in Meeting - Viral Video

How to identify plastic egg Tamil Health Tips