மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு போட்டு அசத்தும் முதியவர்..
இப்போது உள்ள உணவகங்கள் எல்லாம் லாப நோக்கத்துக்காக மட்டுமே ஆரம்பிக்கப்படுகின்றன. அனால் இங்கு; மதுரையை சேர்ந்த ஒரு முதியவர் கடந்த 50 வருடங்களாக குறைந்த விலையில் மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றார்.
மதுரையை சேர்ந்த முதியவர் ராமுசேர்வை, இவர் 1960களின் கூலி தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். பசிக்காக பல உணவங்களில் பாத்திரம் பூசி வேலைபார்த்துள்ளார்.1967ல் அவர் சொந்தமாக தொழில்செய்ய ஆசைப்பட்டுளார், அப்போது வடலூர் இராமலிங்கம் கோவிலுக்கு சென்று வணங்கி.அங்குள்ள அன்னதான கூடத்தில் தான் பசியாறிஉள்ளார். பின்பு அவர் மனதில் நாமும் மக்களுக்கு இது போன்ற சேவையை செய்யவேண்டும் என்று நினைத்து, அவர் மனைவியின் உதவியுடன் 1967ல் ஹோட்டல் கடை திறந்துள்ளார். 1970 முதல் 2000 முதல் 5 ரூபாய்க்கு அன்னம் வழங்கி உள்ளார்.2000 க்கு பிறகு 10 ரூபாய்க்கு உணவு வழங்கிஉள்ளார். தனக்கு வரும் லாபத்தை அப்படியே மக்களுக்கு சேவை செய்து மன மகிழ்ச்சியோடு உள்ளார்.அங்கு வரும் மக்களும் ஆனந்தமாய் சாப்பிட்டு நன்கொடையும் குடுத்து செல்கின்றனர்.இவரின் சேவையை நாமும் வாழ்த்துவோம்.
Comments
Post a Comment