மனைவியின் பாசத்தால், அவருக்கு சிலை வடித்த அன்பு கணவர்
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி இவர் அப்பகுதில் கேபிள் ஆபரேட்டர் வேலையை செய்து வருகின்றார். இவருடைய மனைவி பெரியபிராட்டி அம்மாள். இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவர் இறந்துவிட்டார். இவரின் நினைவாக அவரையே சிற்பமாக செதுக்கி, தினமும் அவரோடு இரண்டு மணி நேரம் பேசிவருகின்றார். ஆசைத்தம்பி, இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இருக்கும் மேட்டுப்பட்டி கிராமம். இவரின் மாமன் மகள் தான் பெரியபிராட்டி அம்மாள். கணவன், மனைவி இருவருக்கும் 1977-ம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது. இருவரும் மிகவும் அன்பும், பாசத்தோடு இருந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. குடும்ப சூழ்நிலை காரணமாக சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளார். மனைவியின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஒரு மளிகை கடை முதலில் நடத்தி உள்ளார். போதிய வருமானம் வரவே , மீண்டும் மனைவியின் அறிவுறுத்தலின் படி கேபிள் டிவி தொடங்கி உள்ளார். அதன் பின் கை நிறைய வருமானம் அவருக்கு வந்தது. பின்பு மனைவியின் விருப்பப்படி நல்ல இடம் வாங்கி வீடும் கட்டி சந்தோசமாக வாழ்ந்துள்ளார். ஆசைத்தம்பியின் அனைத்து ம...
Comments
Post a Comment